சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெண்களுக்கான வசதிகள் குறித்து பெண் பயணிகள் 12 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கான பிரத்தியேக உதவி எண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. தற்போது சென்னை மெட்ரோவிற்கு  1860-425-1515 எனும் என்ற பொது உதவி எண் புழக்கத்தில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.