பருவமழை காலத்தில் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை போக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

இலவச சுகாதார முகாம்கள்: தமிழ்நாடு அரசு தமிழகத்தில்  1,000 இலவச சுகாதார முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாம்கள் அக்டோபர் 29 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது . மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்களுக்கு மக்களைப் பரிசோதிப்பதே இதன் நோக்கமாகும்.

நோய்கள்: சுகாதார முகாம்கள் மழைக்காலத்தில் பரவும் பல்வேறு நோய்களுக்கான பரிசோதனையில் கவனம் செலுத்தும். அதில் முக்கியமாக கொசுக்களால் பரவும் நோய்களான சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா, காலரா, டைபாய்டு போன்ற நீரால் பரவும் நோய்களும் அடங்கும்.

தயாரிப்பு: பருவமழைக் காலத்தில் நோய்வாய்ப்படும் நோயாளிகளுக்குத் தங்குவதற்கு தேவையான மருந்துகள் மற்றும் படுக்கைகளை போதுமான அளவில் இருப்பு வைப்பது என  அரசு பல்வேறு ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளது. பெரும் சிக்கல் மற்றும் உயிர் சேதம் பெரிதளவில் தடுக்க ஆரம்பகால சிகிச்சை-யிலையே  குணப்படுத்த முன்னேற்ப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்: இந்த முகாம் மூலம் நோய்கள் கண்டறியப்பட்டு  சிகிச்சை வழங்கப்படுவதுடன் அது அப்பகுதியில் எப்படி வந்தது, என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான காரணம் அறியப்பட்டு ஊரில் மற்றவர்களுக்கு அதே நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த முகாம் பெரும் பங்காற்றும் என கூறப்படுகிறது.

தீபாவளி முன்னிட்டு: நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், நவம்பர் 12ஆம் தேதியன்று திட்டமிடப்பட்ட சுகாதார முகாம் நவம்பர் 11ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.