பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, 2026-ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிகள் ரசிகர்கள் யாரும் இன்றி வெறிச்சோடிய மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. “நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்கும்போது, ஆயிரக்கணக்கான மக்களை மைதானத்திற்கு வரச் சொல்வது சரியாக இருக்காது” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பெரிய கிரிக்கெட் தொடர் ஒன்று ரசிகர்களே இல்லாமல் வெறும் காலி மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
India me fuel ki shortage Hy ,waha fuel k leay lines lagi Hoi Hy ,humare Pas fuel ki shortage nh hy pic.twitter.com/dtsSnldlO1
— Huzaifa khan (@HuzaifaKhan021) April 13, 2026
இந்த இக்கட்டான நிலையிலும், “இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதாகவும், மக்கள் வரிசையில் நிற்பதாகவும்” நக்வி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் எரிபொருள் விநியோகம் சீராக இருக்கும் நிலையில், தனது நாட்டின் தோல்விகளை மறைக்க நக்வி இப்படிப் பொய் பேசுவதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தொடரின் பாதிப் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள ஆட்டங்களுக்காவது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
