பொதுவாகவே அனைத்து சமையல்களிலும் முக்கியமாக இருப்பது வெங்காயம் மற்றும் பூண்டு தான். இவற்றின் பயன்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்தது தான். வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை இதில் அடங்கும். ஆனால் இவற்றை நம் சமையலறையில் சேமித்து வைக்கும் போது முளைகள் வரும். அவை வராமல் இருக்க சமையலறையில் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உலர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். முடிந்தால் படுக்கைகளின் கீழ் அல்லது மாடிகளில் இவற்றை சேமித்து வைப்பது முளைப்பதை தடுக்கும்.