சமூக ஊடகங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிக் காணொளி வேகமாக பரவி வருகிறது. ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, திடீரென 2 நாய்கள் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மனதை உலுக்கியுள்ளது.
வீடியோவில், ஊஞ்சலில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, திடீரென பாய்ந்து வந்த நாய்களின் தாக்குதலால் விழுந்து கதறி அழும் காட்சி இடம்பெற்று உள்ளது. அதில், ஒரு நாய் சிறுமியின் காலை பிடித்து இழுத்து செல்கிறது . இது, அந்தப் பகுதியில் இருந்த மற்ற குழந்தைகளையும் பெரும் பயத்தில் ஆழ்த்தியது.
अब तो बच्चों को पार्कों में भी भेजना ख़तरनाक हो गया है। pic.twitter.com/5xbvtlC0Z9
— Davinder Pal Singh 幸王 دیویندر سنگھ ਦਵਿੰਦਰ ਪਾਲ ਸਿੰ (@dpsingh1313) August 24, 2025
சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமியை காப்பாற்ற ஒரு இளைஞர் தலையிட்டு, கையில் இருந்த குச்சியுடன் நாய்களைத் துரத்த முயன்றார். ஆனால், நாய் குழந்தையை விட தயாராக இல்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த இளைஞர் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி நாயை பிரித்து சிறுமியை காப்பாற்றினார். அதிர்ஷ்டவசமாக சிறுமிக்கு பெரிதாக காயம் ஏற்படவில்லை என்றாலும், ஏற்பட்ட பயம் நீண்ட நாட்கள் பதிந்து இருக்கும் என பெற்றோர் கூறுகிறார்கள்.
இந்தக் காணொளி, பூங்கா கட்டிடத்தின் மேலிருந்து ஒருவர் மொபைல்போனில் படம் பிடித்ததுடன், அதை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததிலிருந்து வைரலாகி வருகிறது. தற்போது இந்த வீடியோவைப் பார்த்த பலரும் “குழந்தைகளை பூங்காவுக்கே அனுப்ப பயமாக இருக்கிறது” எனக் கூறி, அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் நாய்கள் கட்டுப்பாட்டை உறுதி செய்யக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், பொதுமக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
