உலகை உலுக்கும் உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. இந்தப் போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக தனது நாட்டிலிருந்து வீரர்களை அனுப்பியிருந்தது வடகொரியா.
தற்போது வெளியாகிய தகவலின்படி, போரில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்றது. இதில் உயர் நிலை ராணுவ அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Kim pays tribute to North Korean troops killed in Ukraine
North Korea held a solemn ceremony where Kim Jong Un bowed before portraits of soldiers who died fighting alongside Russia in Ukraine.
Survivors from the units were presented with medals in recognition of their service. pic.twitter.com/L8fre16IdQ
— World War Now (@WorldWarNow_) August 22, 2025
“>
இந்நிகழ்வின் போது, உயிரிழந்த வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் வீரவணக்க காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இந்தத் தருணத்தில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், துயரத்தில் கண்கலங்கி நின்றது காணப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனது நாட்டின் வீரர்கள் இரத்த தியாகம் செய்துள்ளதாகக் கூறிய அவர், “போரில் வீர மரணமடைந்த அனைத்து வீரர்களும் நாட்டின் பெருமை என்றும், அவர்களின் தியாகம் வீணாகாது” என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்தக் காட்சி தற்போது சமூக ஊடகங்களிலும் பரவி மக்கள் மனங்களை கனலடைய வைத்துள்ளது.
