அமெரிக்காவின் டல்லஸ் நகரத்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. `ரஜத்` என்பவர் பதிவிட்ட இந்தக் காணொளியில், அமெரிக்காவின் பிரபல வால்மார்ட் கடையில் விற்பனைக்கு உள்ள இந்திய உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றின் விலைகள் பற்றி கூறியுள்ளார். அவருடைய வீடியோவில், பார்லி ஜி பிஸ்கட் முதல், மசாலா தூள், நெய், தானியங்கள் என இந்தியர்கள் விரும்பும் பொருட்கள் அனைத்தும் காட்சியளிக்கின்றன.
View this post on Instagram
அந்த வீடியோவில், ரஜத் கூறியதாவது: “மசூர், மூங்க் போன்ற ராயல் பிராண்டு பருப்புகள் 4 டாலருக்கு (சுமார் ₹330) விற்கப்படுகிறது. ஹல்திராம் நமகீன், ஆலூ பூஜியா ஆகியவையும் அதே விலையில் உள்ளன. பார்லி ஜி பிஸ்கட் 4.5 டாலர், அதாவது ₹370க்கு மேல்.” என்றும் கூறியுள்ளார். மேலும், “டல்லசில் இந்தியர்கள் பெரும்பாலான விகிதத்தில் இருப்பதால், வால்மார்ட் போன்ற கடைகள் அவற்றின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பொருட்களை மேசையில் வைக்கின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் பகிரப்பட்டதையடுத்து, சமூக ஊடகங்களில் பலர் விலைப் பற்றிய வருத்தங்களை தெரிவித்துள்ளனர். ஒருவர், “இந்திய விலையோடு ஒப்பிடும்போது இங்கு விலை உயர்ந்திருக்கிறது!” என கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர், “20 ரூபாய்க்கு கிடைக்கும் பிஸ்கட் அங்கே 320 ரூபாயா?” என்று ஆச்சரியப்படுகிறார். மேலும், கனடாவில் வசிக்கும் ஒருவர், “அமெரிக்காவில் இந்திய பொருட்கள் கனடாவைவிட கூட அதிகம் தான்” என கருத்து தெரிவித்துள்ளார்.
