2019ல் ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து ஆளுநர் சத்யா பால் மாலிக் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
2019 ஆம் வருடம் ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலை யாராலும் மறக்கவே முடியாது. 40 ராணுவ வீரர்கள் குண்டுவெடிப்பில் துடிக்க துடிக்க கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில் அப்போதைய கவர்னரின் இன்றைய பெட்டி பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்துக்கு குறைக்கப்படுவதற்கு முன்பாக அதனுடைய கடைசி ஆளுநராக இருந்தவர்தான் சத்தியபால் மாலிக்.
நேர்காணலில் அவர், புல்வாமா தாக்குதல் நடப்பதற்கு முன்பாக குறிப்பிட்ட அந்த பயணத்துக்கு சிஆர்பிஎஃப், விமானத்தையே கேட்டனர். ஆனால் அது மறுக்கப்பட்டது. சம்பவம் நடந்த பிறகு, இதுகுறித்து எதுவும் பேச வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று பிரதமர் மோடி தன்னை அழைத்துக்கூறியதாக தெரிவித்துள்ளார்
