தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைக்க விசிக மின்னஞ்சல் மூலம் ஆதரவு தெரிவித்ததாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது ஒரு அதிரடித் திருப்பமாக விசிக தலைவர் தொல். திருமாவளவன், சிந்தனை செல்வன் மற்றும் ரவிக்குமார் ஆகியோருடன் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

விஜய்யின் தவெக 108 இடங்களைப் பிடித்து பெரும்பான்மைக்குக் (118) காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் ஆதரவைத் திரட்டி வரும் வேளையில், கூட்டணியின் மூத்த அங்கமான விசிக, ஸ்டாலின் மற்றும் உதயநிதியைச் சந்தித்திருப்பது கோட்டை அரியணைப் போட்டியில் மீண்டும் ஒரு ‘மெகா சஸ்பென்ஸை’ கிளப்பியுள்ளது.

தவெக-வுக்கு ஆதரவா அல்லது திமுக கூட்டணியிலேயே நீடிப்பதா என்பது குறித்த இறுதி முடிவை எடுக்கும் முன்பாக, ஸ்டாலினுடன் திருமா நடத்தும் இந்த ‘க்ளோஸ் டோர்’ மீட்டிங், தமிழக அரசியல் களத்தில் அடுத்த சில மணி நேரங்களில் ஏதோ ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவது மட்டும் நிச்சயம்.