தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மெகா திருப்பமாக, “எலியும் பூனையுமாக” இருந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தற்போது எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆதரவை அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் கடும் இழுபறி நீடித்து வரும் சூழலில், அமமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான காமராஜ் (நன்னிலம் தொகுதி), அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்து அதற்கான கடிதத்தை ஆளுநர் ஆர்.வி. அர்லேகரிடம் டி.டி.வி. தினகரன் நேரில் வழங்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடியாரைக் கடுமையாக விமர்சித்து வந்த தினகரன், தற்போது தவெக போன்ற புதிய சக்திகளின் வரவைத் தடுப்பதற்காகவும், திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பதற்காகவும் “பழைய பகையை” மறந்து இபிஎஸ்-உடன் கை கோர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பிடிப்பதில் மும்முரமாக இருக்கும் வேளையில், தினகரனின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ எடப்பாடி முகாமிற்குப் புதிய தெம்பைக் கொடுத்துள்ளதுடன், கோட்டை அரியணைப் போரை இன்னும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
