தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டி கிடைக்காமல் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திணறி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அதிரடியாக அறிவித்துள்ளது.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்றால், “ஆட்சியில் பங்கு மற்றும் துணை முதலமைச்சர் பதவி” கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விசிக முன்வைத்துள்ளது.

ஏற்கனவே ஆளுநரிடம் 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை மட்டும் காட்டியுள்ள விஜய்க்கு, 118 என்ற மாய இலக்கை எட்ட விசிகவின் தயவு அவசியமாக உள்ளது.

இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட விசிக தரப்பு, வெறும் வெளி ஆதரவு மட்டும் தராமல் அமைச்சரவையில் அதிகாரபூர்வமான இடத்தைக் கேட்டுள்ளது.

“ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என வன்னி அரசு ஏற்கனவே பதிவிட்டிருந்த நிலையில், தற்போது “துணை முதலமைச்சர்” என்ற கோரிக்கை தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

விஜய்யின் அரசியல் பயணத்தில் இது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதால், இதற்கு அவர் சம்மதிப்பாரா அல்லது மாற்று வழியைத் தேடுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.