உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நான்கு டிவைஸ் களில் ஒரே நேரத்தில் whatsapp அக்கவுண்டை லாகின் செய்யும் வசதி மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை mute செய்யும் வசதி என தொடர்ந்து புதுப்புது அப்டேட்டுகள் பயனர்களுக்காக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது whatsapp கால் தொடர்பாக பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி whatsapp கால் மூலம் தவறான நோக்கத்தில் தீங்கிழைக்கும் நபரின் இருப்பிடத்தை whatsapp மூலமாக அறிந்து கொள்ளும் படியும் அவர்களிடமிருந்து கால் எதுவும் வராத வகையிலும் மாற்றிக் கொள்ளும் படியான அப்டேட் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய அப்டேட் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.