உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் பொதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. இவை பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை எளிதாகவும் அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது whatsapp செயலியில் உள் நுழைவதற்கு கூடுதல் முறையை வாட்ஸ் அப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதற்காக PASSKEY களை அறிவித்துள்ளது.

இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அம்சத்தின் மூலம் உங்களது முகம் அல்லது கைரேகை அல்லது பின் நம்பர் ஆகியவற்றை வைத்து உங்களது வாட்ஸ் அப் கணக்கை திறக்கலாம். மேலும் ஐஓஎஸ் சாதனங்களில் PASSKEY செயல்பாடு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த புதிய அம்சத்தின் மூலமாக whatsapp செயலிக்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் ஹேக் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.