இன்றைய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் புகுந்து விட்டது. இதன் தேவையும் சில இடங்களில் உள்ள நிலையில் அனைத்து வேலைகளும் எளிதாகிவிட்டது. இந்த நிலையில் புதிய AI அம்சங்களை அறிமுகம் செய்து பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக மெட்டா நிறுவனம் அமைத்துள்ளது. இதில் AI அம்சங்களில் AI ஸ்டிக்கர்களை Customise செய்து கொள்ளும் வசதி இடம்பெற்றுள்ளது. AI ஸ்டிக்கர் அம்சம் ஆங்கில மொழியில் மட்டுமே இயங்கும் வகையில் whatsapp செயலியில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய அம்சம் Messenger, insta, Facebook story உள்ளிட்டவைகளில் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முதலில் மொபைலில் வாட்ஸ் அப் செயலியை launch செய்ய வேண்டும். அதன் பிறகு வாட்ஸ் அப் சேட்டை இயக்கி செயலில் உள்ள more என்ற ஐகானை கிளிக் செய்து அடுத்ததாக create மற்றும் continue option கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் உருவாக்க நினைக்கும் ஸ்டிக்கருக்கான விவரங்கள் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு தோன்றும் ஸ்டிக்கரில் கிளிக் செய்து அதனை மற்றவர்களுக்கு நீங்கள் அனுப்பலாம். இதனைத் தவிர தேவையற்ற ஸ்டிக்கர்கள் குறித்து புகார் அளிக்கும் வசதியும் வாட்ஸ் அப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு குறிப்பிட்ட ஸ்டிக்கரை அழுத்தி பிடித்து ”>” Iconஐ Click செய்து ”Report”, பிறகு மீண்டும் ”Report” ஆப்ஷன்களை Click செய்ய வேண்டும்.