உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக பல புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் பயனர்களின் கணக்குகள் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. அதாவது சேட் மூலமாக பாலியல் செய்தல் மற்றும் தவறான கருத்துக்கள் பரப்புதல் உள்ளிட்ட காரணத்தால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான கணக்குகள் முடக்கப்படுகின்றன.

அதன்படி பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் விதமாக ஏதாவது முக்கியமான புகைப்படத்தை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் வகையில் புதிய அப்டேட் வழங்கப்பட்டது. அதனைப் போல தற்போது view once வசதி மூலமாக ஒருமுறை மட்டுமே வாய்ஸ் மெசேஜ்களை கேட்கும்படி அப்டேட்டும் வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வாட்ஸ் அப் டெஸ்டர்களுக்கு இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.