மெட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான whatsapp செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு whatsapp கணக்குகளை பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம் வர உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி விரைவில் whatsapp பயனர்கள் ஒரே போனில் இரண்டு whatsapp கணக்குகளை பயன்படுத்த முடியும். இதன் மூலமாக ஒருவர் தான் வைத்திருக்கும் இரண்டு செல்போன் எண்களிலும் வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வரலாம். ஒரே செயலியில் இனி இரண்டு whatsapp கணக்குகளை ஒருவரால் பயன்படுத்த முடியும்.

இந்த வசதி இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். அதேசமயம் இனி வாட்ஸ் அப்பில் ஒரு எண்ணை லாக் அவுட் செய்ய வேண்டிய அவசியம் அல்லது இரண்டு செல்லிடப்பேசிகளை பயன்படுத்தும் பிரச்சனையோ மாற்றி மாற்றி whatsapp பயன்படுத்தும் போது தவறானவர்களுக்கு தகவல் அனுப்பி விடுவோமோ என்ற அச்சமும் இருக்காது. வாட்ஸ் அப் செட்டிங்ஸ் சென்று உங்களது பெயர் இருக்கும் இடத்திற்கு நேராக இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து ad அக்கவுண்ட் என்று சேர்த்துக் கொள்ளலாம். அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் செயலியை மட்டும் டவுன்லோட் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.