குறிப்பிட்ட மாடல் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு போன்களில் whatsapp செயலியின் பயன்பாடு காலாவதியாக உள்ளது. மெட்டா நிறுவனம் சில பழைய ஃபோன்களில் whatsapp தன்னுடைய சேவைகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி மேம்பட்ட தொலைபேசிகள் மற்றும் மென்பொருள்களில் வேலை செய்யும் புதிய தனி உரிமை அம்சங்களை whatsapp வெளியிட்டுள்ள நிலையில் ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கும் குறைவான பதிப்புகளில் இயங்கும் பழைய ஃபோன்களில் இந்த அம்சங்கள் இயங்காது எனவும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு பிறகு இந்த ஃபோன்களுக்கு சப்போர்ட்  செய்வதை நிறுவனம் நிறுத்தும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.