தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,03,385 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 3,49,697 பேரும், மாணவிகள் 4,05,753 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஹரி என்ற மாணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தோல்விக்காக யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் எனவும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.