திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி பேசிய நிலையில் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். நரேந்திர மோடி பேசுகையில், “மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கட்சி துடைத்து எறியப்படும்” என விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், “காங்கிரஸ் கூட்டணியை துடைத்து எறிய பிரதமருக்கு துடைப்பம் தேவை, ஆனால் அந்த துடைப்பமே (ஆம் ஆத்மி சின்னம்) எங்கள் கூட்டணியில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.