சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடும். அப்படி ஒரு வீடியோதான் இப்போது எக்ஸ் (X) தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இரண்டு போலீஸார் ஒரு குற்றவாளியைப் பிடித்து பைக்கில் அழைத்துச் செல்ல முயல்கின்றனர். ஒரு போலீஸ்காரர் பைக்கை ஸ்டார்ட் செய்ய, மற்றொருவர் அந்தத் திருடனை பின்னால் அமர வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறார்.

​ஆனால், வண்டி கிளம்பும் அதே வேளையில், யாருமே எதிர்பார்க்காத விதமாக அந்தத் திருடன் பின்னால் இருந்த போலீஸாரை பலமாக ஒரு தள்ளு தள்ளிவிட்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடுகிறான். கையில் பிடி இருந்தும், கண் முன்னே திருடன் தப்பிச் செல்வதைப் பார்த்த போலீஸார் செய்வதறியாது திகைத்து நிற்கும் காட்சி பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கிறது. “இவ்வளவு லூஸாகவா பிடிப்பீர்கள்?” என்றும், “அவனுக்கு ஓடுவதற்கு போலீஸாரே ட்ரைனிங் கொடுத்திருப்பார்களோ?” என்றும் நெட்டிசன்கள் போலீஸாரை வாரித் துவைத்து வருகின்றனர்.