உலகநாயகன் கமல்ஹாசன் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியானது. இதில் இருந்து இந்நிகழ்ச்சி குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இந்த முறை ஒரு வீடு அல்ல இரண்டு பிக்பாஸ் வீடுகள் உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 100 நாள் ஒரு வீட்டில் தங்குவது தான் வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு வீடு நவீன வசதிகள் உடையதாகவும், மற்றொரு வீடு எந்தவொரு வசதிகள் இல்லாமலும் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறான பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.