பின்னணி பாடகி , நடிகை என பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டி வருபவர் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் சீசன் 7-ல் பங்கேற்று அழகாக பாடி அசத்தினார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில், பாடல், நிகழ்வுகள் என பிஸியாக இருந்தாலும் சிவாங்கி அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், காவாலா பாடலுக்கு தமன்னா போல் ஆடிய வீடியோக்காட்சியை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள், “ சிவாங்கிக்குள் இப்படியொரு திறமையா?” என கலாய்த்து பேசியுள்ளார்கள்.