விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப் உள்ளிட்ட மக்களுக்கு விருப்பமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனில் இரண்டு வீடு என கூறி போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் தினமும் ஒரு டாஸ்க் பல சண்டைகள் இப்படி பிக் பாஸ் வீடு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகியோருக்கு இடையில் சண்டைகள் வெடித்துக் கொண்டிருக்கிறது. அதில் ஜோதிகாவை பார்த்து, நீ தமிழ் எழுது டீ பார்க்கலாம் என்று விசித்திரா அசிங்கப்படுத்தியுள்ளார். அதற்கு சரியான பதிலடி கொடுத்த ஜோவிகா நான் தமிழ் படிக்கலை என்று ஓபன் ஆக பேசியுள்ளார். இருவரும் சண்டை போட்ட வீடியோ தற்போது புரோமோவாக வெளியாக்கியுள்ளது.