அர்ஜென்டினாவின் முன்னாள் அழகு ராணியும் நடிகையுமான ஜாக்குலின் கேரிரி (48) காலமானார். பிளாஸ்டிக் சர்ஜரி தவறுதலாக செய்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 1996 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த சான் ரஃபேல் என் வெண்டிமியா திராட்சை அறுவடை விழாவில் அழகுப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன் பிறகு லத்தின் அமெரிக்க திரைப்படங்களில் நடித்த பிரபலமான இவர் அக்டோபர் 1ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.