மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில், ‘தம்பி பொறுத்தது போதும், அரசியலுக்கு வா’ என்று முன்னாள் முதல்வர்கள் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் நடிகர் விஜய்யை முதல்வர் பதவியேற்க அழைப்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டி விஜய் ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.