லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த டிரைலரின் ஒரு இடத்தில் *** என்ற தகாத வார்த்தையை நடிகர் விஜய் பயன்படுத்தி இருப்பதை பலரும் சுட்டிக்காட்ட தொடங்கியுள்ளனர். விஜய் போல குடும்ப ரசிகர்கள் அதிகம் கொண்ட மாஸ் ஹீரோ இந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.