விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்போது 82 நாட்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் சரவண விக்ரம் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படும் எலிமினேஷன் எபிசோட் வெள்ளிக்கிழமையே ஷூட் செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 82 நாட்களைக் கடந்து முடிவு பெறும் நிலையை எட்டி உள்ள நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் சரவணன் விக்ரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.