நடிகர் போண்டா மணி, உடல்நலக்குறைவால் காலமானார். வின்னர், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால், சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று இரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்