தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக போண்டாமணி இன்று காலமானார். இவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு தனுஷ், விஜய் சேதுபதி, வடிவேலு மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். சமீபத்தில் அமைச்சர் சுப்பிரமணியனும் நேரில் சென்று நலம் விசாரித்ததுடன் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த போண்டாமணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.