பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து இடைவிலக போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் வருடம் தொடங்கி தற்போது ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதுவரை எந்த சீசனிலும் சிக்காத வகையில் இந்த சீசனை போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்த காரணத்தால் கடுமையான விமர்சனத்தில் சிக்கியுள்ளார் கமல்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் கமலுக்கு இது பெரும் அடியாக அமைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியால் தன்னுடைய மானம் மரியாதை எல்லாம் போய்விட்டது என்று அவர் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் முடிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து கமல் இனிவரும் சீசன்களில் தொகுத்து வழங்கப் போவதில்லை என்று உறுதியாக இருக்கிறாராம்.