ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்தியா–பாகிஸ்தான் போட்டி எப்போதும் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றதே. இம்முறை நடைபெற்ற சூப்பர்–4 மோதலின் டாஸ் நேரத்தில் நடந்த ஒரு காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலியின்   கால்களைத் தொட்டதாக சிலர் குற்றம் சாட்டினர். ஆனால் உண்மையில், டாஸ் முடிந்த பிறகு விழுந்த நாணயத்தை எடுக்க குனிந்த சூர்யகுமார் அருகில் நின்ற சல்மான் அலியும்  ஒரே கோணத்தில் கேமராவில் படமாகியதால் இப்படிப் புரிந்துகொள்ளப்பட்டது.

“>

 

சூர்யகுமார் யாதவ் தனது கால்களிலிருந்து தொலைவில் இருந்த நாணயத்தை எடுக்க முயன்றது தெளிவாக காட்சியில் உள்ளது. இதனை வேண்டுமென்றே சில சமூக வலைதள பக்கங்கள் தவறான பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருகின்றன என்பது கண்டிப்பாகும்.

இதற்கிடையில், மைதானத்தில் இந்திய அணி தனது திறமையால் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.