2025 ஆசியக் கோப்பையில் இந்தியா இதுவரை எந்த அணியாலும் தோற்கடிக்கப்படாமல் வெற்றிப்பயணம் தொடர்கிறது.
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை ) நடைபெறும் இந்தியா–வங்கதேச மோதலை முன்னிட்டு, வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், “இந்திய அணி பலவீனமானது. எந்த அணியாலும் அவர்களை வீழ்த்த முடியும்” என தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
சூப்பர் ஃபோர் கட்டத்தின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் இலங்கையை தோற்கடித்தது அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து மேலும் பேசிய பில் சிம்மன்ஸ், “இந்திய அணியை வெல்ல முடியாதது அல்ல. போட்டிக்கு முன்பு என்ன நடந்தது என்பது முக்கியமல்ல; அந்த மூன்றரை மணி நேரத்தில் எவ்வாறு ஆடுகிறோம் என்பதுதான் முக்கியம். எங்களால் முடிந்தவரை சிறப்பாக ஆடுவோம், இந்திய அணியின் பலவீனங்களை வெளிக்கொண்டு வந்து அதை பயன்படுத்துவோம்.
அதுவே எங்களுக்கு வெற்றியைத் தரும்” என்றார். இந்த அறிக்கை, இந்தியா-வங்கதேச மோதலுக்கு முன்பே பரபரப்பை கிளப்பியுள்ளது.
