ஆசியக் கோப்பை 2025 சூப்பர்–4 சுற்றில் நடந்த இந்தியா–பாகிஸ்தான் போட்டி, மைதானத்திலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், பீல்டிங் செய்யும் போது ரசிகர்களை நோக்கி “6-0” என்ற சைகை செய்தார். இது ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் வெளியிட்ட பொய்யான தகவலை நினைவூட்டுவதாக விமர்சிக்கப்பட்டது. அதேசமயம், பாகிஸ்தான் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்த பிறகு துப்பாக்கிச் சூடு கொண்டாட்டம் செய்ததும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது பாணியில் ஹாரிஸ் ரவூப்பிற்கு தகுந்த பதிலடி கொடுத்தார். போட்டிக்குப் பிறகு வைரலான வீடியோவில், அர்ஷ்தீப் கூட்டத்தை நோக்கி கைகளால் விமான வடிவம் காட்டி, அதை தனது கீழ்முதுகில் மோதி சின்னம் காட்டியுள்ளார்.

“>

 

இதனை, ஹாரிஸ் ரவூப்பின் 6-0 சைகைக்கு தகுந்த பதிலடி என இந்திய ரசிகர்கள் ஆரவாரத்துடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும், போட்டியின் போது அபிஷேக் சர்மா மற்றும் ஹாரிஸ் ரவூப் இடையே வாக்குவாதம் நடந்ததால், நடுவர் தலையிட்டு சூழ்நிலையை அமைதிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது