உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் , பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அப்சல் என்பவர், போலீசாரின் பாதுகாப்பிலிருந்த நிலையில் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், சிவில் உடையில் பணியாற்றிய கான்ஸ்டபிள் ரஷீத்தை தள்ளிவிட்டு அப்சல் தப்பியதுடன், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சம்பவம் தொடர்பாக கிராமத் தலைவர் ரவூப் கானின் தந்தை பரூக் அலிகான், எஸ்எஸ்பி தினேஷ் குமாரை நேரில் சந்தித்து, விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கக் கோரியுள்ளார்.
पुलिस को धक्का देकर फरार रेप आरोपी अफजाल!
उत्तर प्रदेश के बुलंदशहर में रेप का कथित आरोपी अफजाल सिपाही राशिद को धक्का देकर फरार हो गया. जिसके बाद पुलिस ने गुस्से में ग्राम प्रधान रऊफ खान समेत कई ग्रामीणों पर केस दर्ज कर दिया.#uttarpradesh | #bulandshahr | #video pic.twitter.com/lrMFs3qLlh
— NDTV India (@ndtvindia) September 9, 2025
“>
சம்பவத்தன்று ரவூப் கான் வயலுக்குச் செல்லும் போது, காவல்துறையினரால் அழைக்கப்பட்டார். அப்சலை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது, அவரது சந்தேக நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால், காவல்துறை அலட்சியத்தால் அப்சல் தப்பிய உள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் பரவியதை தொடர்ந்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என எஸ்எஸ்பி தினேஷ் குமார் சிங் உறுதியளித்துள்ளார்.
