குறுகலான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், சாலையைக் கடக்க முயன்றபோது எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் சாலையைக் கடக்க முற்பட்ட அதே விநாடியில், கட்டுப்பாட்டை இழந்த கார் அவர் மீது மோதித் தூக்கி வீசியது. மோதிய வேகத்தில் அந்த நபர் அந்தரத்தில் பறந்து விழுந்ததும், கார் சாலையின் நடுவே போய் நின்றதும் பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கிறது.
People have become so reckless these days… pic.twitter.com/jGRfCq0WtN
— Divya Gandotra Tandon (@divya_gandotra) February 18, 2026
தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தைப் பார்த்த பலரும், “ரோட்டைக் கடக்கும்போது எவ்வளவு கவனமாக இருந்தாலும், இப்படி அஜாக்கிரதையாக வருபவர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது” என வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர். பதற்றத்தை உண்டாக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
