தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை மொத்தம் 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​மேலும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் வட மாவட்டங்களான தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் நாளை பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.