“ரஷ்ய மக்களே, புதினுக்கும் அவருக்கு வாக்களிச்சதுக்காக உங்களுக்கும் இன்னைக்கு நள்ளிரவு நன்றி சொல்லிக்கோங்க , அவர் உங்க உசுருக்கே ஆபத்தைக் கொண்டு வந்துட்டாரு !”
என்று உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு மன்றத்தின் தவறான தகவல் தடுப்பு மையத் தலைவர் ஆண்ட்ரி கோவலென்கோ ரஷ்ய குடிமக்களைப் பார்த்து மிக ஆக்ரோஷமாகவும் ஏளனமாகவும் எச்சரித்துள்ள நிலையில்,
உலகிலேயே மிகக் கடுமையான முறையில் பலப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட வான்வெளிப் பகுதியாகக் கருதப்படும் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை உக்ரைன் ராணுவம் தனது அசுர ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தரைமட்டமாக்கியுள்ளது சர்வதேச அளவில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (ஜூன் 18, 2026) அதிகாலையில் அரங்கேறிய இந்த அதிர்ச்சித் தாக்குதலில், மாஸ்கோவில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான ‘எம்என்பிஇசட்’ (MNPZ) மீது உக்ரைனின் ட்ரோன்கள் அடுத்தடுத்து வெடிகுண்டுகளை வீசித் தாக்கியதில், ஒட்டுமொத்தப் பகுதியும் கொழுந்துவிட்டு எரியும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோக்களை நெக்ஸ்டா ஊடகம் வெளியிட்டுள்ளது.
☕️ Good morning, ladies and gentlemen! Do you like the smell of de-oilification in the morning?
Judging by the reactions, Moscow residents don’t seem to enjoy it very much. 😏 pic.twitter.com/DWk5CcvfHv
— NEXTA (@nexta_tv) June 18, 2026
“>
“மாஸ்கோ நகரம் மொத்தமா பற்றி எரியுதுப்பா!” என்று உள்ளூர்வாசிகள் கடும் பீதியிலும் சீற்றத்திலும் சமூக வலைதளங்களில் கதறி எழுதி வரும் வேளையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இனி ரஷ்யர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பவர் இல்லை என்றும், போரை அவர் மாஸ்கோவின் மையப்பகுதி வரை கொண்டு வந்துவிட்டார் என்றும் உக்ரேனியத் தரப்பு பகீர் பிரகடனம் செய்துள்ளதால் கோட்டை அடியோடு குலுங்கியுள்ளது.
