காடுகளில் பலம் வாய்ந்த விலங்குகள் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு பறவை மிகவும் கொடிய விஷப் பாம்பை வேட்டையாடும் அரிதான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தக் காணொளியில், ரூஃபஸ் ட்ரீபைப் (Rufous Treepie) என்று அழைக்கப்படும் காக வகைப் பறவை ஒன்று, ஒரு பாம்பின் அருகில் வந்து, முதலில் தன் காலால் அதன் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது. பின்னர், தனது கூர்மையான அலகால் பாம்பின் வாயில் வேகமாகத் தாக்கத் தொடங்குகிறது. பறவையின் பிடி மிகவும் பலமாக இருந்ததால், பாம்பு தப்பிக்க முடியாமல் முற்றிலும் பலவீனமடைந்து, அசைய முடியாமல் தவிக்கிறது.
<a href=”http://
— Wildlife Uncensored (@TheeDarkCircle) November 20, 2025
“>
தனது அலகால் பாம்பின் தாடையைப் பிடித்து அந்தப் பறவை இழுப்பது, அதுவே காட்டிற்குள் உள்ள உண்மையான வேட்டையாளி போலத் தோன்றுகிறது. பூச்சிகள் மற்றும் பாம்புகளை உணவாகக் கொள்ளும் இந்தப் பறவையின் இந்தச் சாகசச் செயலால் பலரும் ஆச்சரியமடைந்து, “இயற்கை அதன் உண்மையான வடிவத்தில் எப்போதும் அதிர்ச்சியளிக்கிறது”, “இந்த ஆக்ரோஷம் நம்ப முடியாதது” என்று கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
