டெல்லி துவாரகா பகுதியில் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்கள் ஜப்பானிய பாணியில் தலைவணங்கி (Bowing) மரியாதை செலுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஜப்பானிய பொது வாழ்க்கைக் கலாச்சாரத்தின் ஒழுக்கம் மற்றும் மரியாதையைப் பிரதிபலிக்கும் வகையில், இவர்கள் சிக்னலில் காத்திருந்த வாகனங்களை நோக்கி மிகத் தாழ்வாகக் குனிந்து மரியாதை செய்தனர். இந்த காணொளியை வெளியிட்டவர்கள், “ஜப்பானிய கலாச்சாரத்தை துவாரகாவுக்குக் கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
<a href=”http://
View this post on Instagram
“>
இந்த வேடிக்கையான செயலுக்கு இணையத்தில் பலதரப்பட்ட கருத்துகள் குவிந்து வருகின்றன. சிலர், “இதைப் பாராட்ட வேண்டும்; இது அனைவருக்கும் ஒரு நல்ல நாகரிகப் பாடம்” என்று வரவேற்கின்றனர். அதேசமயம், வேறு சிலர், “முதலில் இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுங்கள், பிறகு ஜப்பானிய கலாச்சாரத்தைப் பின்பற்றலாம்” என்றும் விமர்சித்துள்ளனர்.
