கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக்கை விட 59,709 வாக்குகள் அதிகம் பெற்று சிவக்குமார் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் “பாஜக அல்லாத கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைைய வேண்டும். கர்நாடக தேர்தல் வெற்றியை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.