கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக்கை விட 59,709 வாக்குகள் அதிகம் பெற்று சிவக்குமார் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கர்நாடகா வெற்றியானது நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும்  ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நன்றி எனவும் சித்தராமையா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வென்று ராகுல்காந்தி பிரதமராவார் என்றும் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.