திமுக ஐடி விங் சார்பில் சமூக வலைத்தள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கின்ற கொள்கையற்ற கூட்டம்தான் அதிமுக.

இனிமேலும் பாஜகவுடன் இருந்தால் தமிழ்நாட்டு மக்களால் மொத்தமாக புறக்கணிக்கப்படுவோம் என பயந்து உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கின்ற பாஜகவும் அண்ணா பெயரில் கட்சி நடத்திய அதை பாஜகவுக்கு அடகு வைத்த அதிமுகவும் வேறு வேறு அல்ல, நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் என்று முதல்வர் விமர்சித்துள்ளார்.