‘என்டிஏ’ கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சமீபத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தினகரன் மீண்டும் ‘என்டிஏ’ கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டு எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த சூழ்நிலையில், இன்று (செப்டம்பர் 24) செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், இதுகுறித்து நேரடியாக விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது: “ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக உள்ள கூட்டணியில் நாங்கள் நிச்சயமாக இணைய விருப்பமில்லை. எனவே, இதற்காக எந்தவிதமான மறுபரிசீலனைக்கும் அவசியமே இல்லை. கூட்டணி தொடர்பான எங்கள் நிலைப்பாடு தெளிவானது” என்று தெரிவித்தார். இதன் மூலம், டிடிவி தினகரன் மீண்டும் ‘என்டிஏ’வில் சேர்வது பற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
