அதிமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய ஹெச்.வி. ஹண்டேவை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து உரையாடினார்.
தற்போது பாஜகவில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை பாராட்டி, தொடர்ந்து கடிதம் எழுதி வந்த ஹெச்.வி. ஹண்டேவின் செயல்பாடுகளுக்கு முதல்வர் நன்றி தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
நம் #DravidianModel அரசின் திட்டங்கள் குறித்த தமது பார்வைகளை முன்வைத்தும் – தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு பொழிந்தும் முன்னாள் அமைச்சர் திரு. H.V.ஹண்டே அவர்கள் எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை!
99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை, அவரது மருத்துவமனையில்… pic.twitter.com/nCD4kw5UeW
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 24, 2025
“>
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், “99 வயதிலும் அயராது செயல்பட்டு வரும் டாக்டர் ஹெச்.வி. ஹண்டேவை சந்தித்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அரசின் திட்டங்களை ஊக்குவித்து தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து வருவதற்காக அவருக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த சந்திப்பு, அரசியல் சூழலில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளதுடன், சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
