சமீப காலமாகவே தொடர்ச்சியாக பாஜக பிரமுகர்கள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பரங்குன்றம் பாஜக மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் ராமநாதன் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். பின்னர் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். இது பாஜகவினரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.