சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களின் கண்களைக் கலங்க வைப்பதோடு மனதிற்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் குரங்குகளுக்குத் திராட்சைப் பழங்களை (Grapes) உணவாகக் கொடுக்கிறார். முதலில் அங்கிருந்த ஒரு குரங்கிற்குத் திராட்சையைத் தருகிறார்.



அதனைத் தொடர்ந்து, இரண்டு கைகளும் இல்லாத ஒரு மாற்றுத்திறனாளிக் குட்டி குரங்கிற்குத் திராட்சை வழங்குகிறார். அந்தப் பரிதாபமான குட்டி குரங்கு, தனது கைகள் இல்லாத நிலையிலும் அந்த நபர் கொடுத்த பழத்தைத் தனது வாயாலேயே லாவகமாக வாங்கிக்கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓரிடத்தில் அமர்ந்து சாப்பிடுகிறது. இந்த உருக்கமான காட்சியைக் கண்ட இணையவாசிகள், அந்தக் குட்டி குரங்கின் மீதான அன்பிற்காக அந்த நபருக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.