சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு சிறிய குழந்தைக்கு ‘மம்மா’ என்று பேசக் கற்றுக்கொடுக்க பெற்றோர் முயற்சி செய்கிறார்கள். குழந்தையை உற்சாகப்படுத்த அதன் முன்னே உணவை வைத்து, ‘மம்மா’ என்று சொன்னால் அந்த உணவு கிடைக்கும் என்று ஆசை காட்டுகின்றனர்.

ஆனால், அந்த குழந்தை பேசுவதற்கு முன்பாகவே, அருகில் அமர்ந்திருந்த வளர்ப்பு நாய் மிகவும் தெளிவாக ‘மம்மா’ என்று கத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குழந்தையின் உணவிற்காக அந்த நாய் காட்டிய இந்த புத்திசாலித்தனம் காண்போரை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Excitdaily (@excitdaily)

“>

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளையும், லட்சக்கணக்கான விருப்பங்களையும் பெற்று இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாயின் இந்த சமயோசித புத்தியைக் கண்டு நெட்டிசன்கள் வியந்து கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.

மேலும் “குழந்தையை விட நாய் மிகவும் கெட்டிக்காரராக இருக்கிறது” என்றும், “சாப்பாட்டிற்காக நாய் எதையும் செய்யும்” என்றும் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர். செல்லப்பிராணிகளின் இத்தகைய சுட்டித்தனமான செயல்கள் இணையத்தில் எப்போதும் தனி ரசனைக்குரிய ஒன்றாகவே இருக்கின்றன.