பாகிஸ்தான் மத்திய மிடில் ஆர்டர் வீரரான ஆசிஃப் அலி, தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்.
58 டி20 போட்டிகளிலும் 21 ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தானுக்காக விளையாடிய ஆசிஃப், தனது வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இனி அவர், உள்நாட்டு கிரிக்கெட்டிலும், பிஎஸ்எல் உள்ளிட்ட உரிமையாளர் லீக்குகளிலும் மட்டுமே தொடரவுள்ளதாக கூறியுள்ளார்.
2018-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது டி20 கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய ஆசிஃப், அதற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலும் இடம் பெற்றார். 2021 டி20 உலகக் கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 7 பந்துகளில் 25 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றியை தேடி வந்த மைதானம் இன்னும் ரசிகர்களுக்கு ஞாபகம் இருக்கும் . 2023 ஆசிய விளையாட்டு போட்டியில் நடந்தது தான் அவரது கடைசி சர்வதேச போட்டி.
View this post on Instagram
“>
ஆசியக் கோப்பை அணியில் இடம் கிடைக்காததால் ஏற்பட்ட மனநிலையே அவரது ஓய்வு முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பதிவில்; “‘எனது வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதை என்னவென்றால், பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்து, கிரிக்கெட் மைதானத்தில் எனது நாட்டிற்காக விளையாடியது எனது பெருமைமிக்க அத்தியாயம். எனது ரசிகர்கள், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, கடினமான சூழ்நிலைகளில் என்னை ஆதரித்ததற்கு நன்றி. உலகக் கோப்பையின் போது எனது அன்பு மகளின் மரணம் உட்பட, கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி, உங்கள் பலம் என்னைத் தாங்கிச் சென்றது. நான் மிகுந்த பெருமையுடன் ஓய்வு பெறுகிறேன், உலகம் முழுவதும் உள்நாட்டு மற்றும் லீக் கிரிக்கெட்டைத் தொடர்ந்து விளையாடுவேன்.’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்..
