90-களில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் தற்போதைய அணிக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக முன்னாள் வீரர் முகமது அமீர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

அன்று இந்திய அணி பாகிஸ்தானைப் பார்த்து பயந்ததாகவும், ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“>

 

தற்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியை ஒரு பெரிய சவாலாகவே கருதுவதில்லை என்றும், போட்டியில் பாகிஸ்தானை வென்ற பிறகு கூட, அது ஒரு சாதாரண வெற்றி என்பது போல அவர்கள் கொண்டாட்டங்கள் ஏதுமின்றி அமைதியாகக் கடந்து செல்வதாகவும் அமீர் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.