இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பிறகு, ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ரசா மிகுந்த நம்பிக்கையுடன் பேசியுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையை வீழ்த்தி, ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஜிம்பாப்வே சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா இருக்கும் அதே பிரிவில் ஜிம்பாப்வே இடம்பெற்றுள்ள நிலையில், சூப்பர்-8 சுற்றின் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எங்களால் வீழ்த்த முடியும் என்று ரசா சவால் விடுத்துள்ளார்.

​கடந்த இரண்டு வாரங்களாகத் தங்கள் அணி கடுமையாக உழைத்து வருவதாகவும், தற்போது மற்ற அணிகளின் மரியாதையை ஜிம்பாப்வே பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கையின் சுழற்பந்து வீச்சைத் திறம்படக் கையாண்டது போல, அடுத்தடுத்த போட்டிகளிலும் அழுத்தத்தைத் தந்து வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். சூப்பர்-8 சுற்றில் விளையாட இந்தியா செல்லவிருக்கும் ஜிம்பாப்வே, அங்குள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும் என்றும் ரசா குறிப்பிட்டுள்ளார்.